• காலண்டர்

    மே 2012
    தி செ பு வி வெ ஞா
    « நவ    
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • தொகுதி வாரியாக

  • இது வரை வந்தவர்கள்

    • 20,000 வாசகர்கள்

குழந்தைகளைக் கொல்வது மென்மையான செயல்!!

நம் நாட்டில் இன்று தினசரி நடக்கும் கொலைகளைக் கண்டு யாரும் சட்டை செய்வதில்லை. எங்கோ யாருக்கோ நடக்கிறது. செய்திப் பத்திரிக்கைகள் முனதினம் நடந்த குற்றங்களை பேர் ஊர் வயது போட்டோ எல்லாம் போட்டு அடுத்த நாள் காலையில் நமக்கு தெரிவித்துவிடுகிறது. மேலதிக விவரங்களை தர துப்பறியும் பத்திரிக்கைகள் (து!!) காததிருக்கின்றன.

வாரம் ஒரு முறை வந்துக் கொண்டிருந்த இந்த மாதிரி பத்திரிக்கைகள் குற்றங்கள் பெருகிவருவதால் திணறிப்போய் சமூக சேவையை விரிவு படுத்தி வாரம் இருமுறை ஆக்கிவிட்டன.

இப்படி தினசரி குற்றங்களைக் கேட்டு படித்து பழகிவிட்டதால் ஒரு கிறுகிறுபபே இல்லாமல் போய்விட்டது. பத்தோடு பதினொன்றாக சொத்துக்கள் பணம் சம்பந்தப்பட்ட கொலைகள் நடப்பதால் நமக்கு அது ஒரு நிறைவைத் தருவதில்லை.

அடுத்து வந்த கள்ளக்காதல் கற்பழிப்பு முதலான பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக இருந்தன. இதைப் புரிந்து கொண்ட பத்திரிக்கைகள் யார் யாரை வைத்திருந்தான் அது யாருடைய மனைவி எப்படி விஷயம் லீக் அவுட் ஆனது கத்தியால் குத்தினானா கல்லைத்துக்கிப் போட்டாளா போன்று நேரில் பார்த்து (பார்த்தது போலத்தான்!!) விளக்கமாக எழுதி புண்ணியம் தேடிக் கொண்டன.

இன்றைக்கும் இ்நத மாதிரி பலான மேட்டர் இல்லாத பத்திரிக்கைகள் பொட்டலம் கட்டத்தான் லாயக்கு. யாரும் வாங்குவதில்லை முக்கியமான விஷயம் என்னவென்றால் செக்ஸ் புக்கை பத்திரமாக துணிக்கு அடியிலும் பெட்டுக்கு அடியிலும் போட்டு வைத்து யாரும் இல்லாதபோது ரகசியமாக எடுத்து படிக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பா நம் முதுகில் டின் கட்டுவார் இந்த மாதிரி பத்திரிக்கைகள் வெளியில் போடடு வைக்கலாம் அந்த வகையில் நமக்கு ஒரு வாய்ப்பு.

அது போகட்டும்.

இந்தப் பதிவு பத்திரிக்கைகள் பற்றியல்ல.

இப்படி கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் லஞ்சம் என்று பத்திரிக்கைகள் நமது மூளைக்குள் ஏற்றி ஏற்றி எல்லாமே சாதாரண நிகழ்வாகிவிட்டது. இது மாதிரி எதைக் கேள்விப்ட்டாலும் நம் ரத்தம் கொதிப்பதில்லை.

ஆனால் சிறிது இடைவெளிக்குப் பிறகு ரெண்டு நாளைக்கு முன்னாள் நம் ரத்தம் கொதித்தது. நம் கண்ணில் நீர் வழிந்தது. பணத்துக்காக இரண்டு பிஞ்சு பாலகர்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்த செய்தி கேட்டு நெஞ்சம் துடித்தது.

இழுத்து வச்சி அறுக்கணும் முதல் தலையை கொய்யணும் வரை எல்லாருடைய ஆவேசமும் ஒரே மாதிரி இருந்தன.

பதற வேண்டாம்.

குழந்தைகளை பலாத்காரம் செய்து நீரில் மூழ்கடித்து கொன்றது மென்மையான செயல். கை வெட்டுதல் தலையை சீவுதல் போன்ற இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை.

அனாவசியமாக குற்றவாளியை கொன்று அவன் திருந்தி வாழ உள்ள வாய்ப்பை கெடுத்துவிட வேண்டாம்.

நம் நாட்டு சட்டம் அதன் கடமையைச் செய்யும். சிறிய தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதன் பிறகு அவன் நம்முடன் ஒன்றாக திருந்தி வாழ்வான். அவன் மட்டும் அல்ல. இதைவிட் மோசமான குற்றம் செய்தவனையும் நம்முடன் திருந்தி வாழ அனுமதிப்போம்.

இன்னும் நிறைய குழந்தைகள் மிச்சமிருக்கின்றன.

நம் முறை வரட்டும்.

அப்போது நிதானமாக பதறுவோம்.

பணக்காரியாக எளிய வழி!!!

மனுஷன் ஒரு சோஷியல் அனிமல். சமூகப் பிராணி. மத்தவங்களோட பிணைப்பு இல்லாம அவனால் தனியா வாழ முடியாது. மிருகங்கள் இன்னொரு மிருகத்தோட ”ஒத்துழைப்பு” தேவையா இருக்கிறது அதோட இனப்பெருக்க மூடுக்கு மட்டும் தான். (குட்டிகாலம் தவிர்த்து) பெரும்பாலான உயிரினங்கள் பிறந்தவுடனேயே ”ஆக்டிவேட்” ஆகிவிடும். எழுந்து நடக்கத் தொடங்கிவிடும் தானாகவே உணவு உண்ணும்.

ஆனால் மனுஷனுக்கு மட்டும் தான் பிறப்பு முதல் இறப்பு வரை அடுத்தவனோட உதவி தேவைப்பட்டுக்கிட்டே இருக்கு.

பொதுவா நம்மோட எதிர்பார்ப்பு என்னவென்றால் இந்த சமூகம் நம்மை தோளில் உயர்த்தி கொண்டாட வேண்டும் எல்லர்ரும் புகழவேண்டும். எல்லாருக்கும் நம்மை தெரியவேண்டும் எல்லாரும் எனக்கு உதவ வேண்டும் என்பது தான்.

நாம் விரும்புவதெல்லாம் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

காசு பணம் கவுரவம் பெருமை புகழ் எல்லாத்தையும் நமக்குத் தர இந்த உலகம் எப்போதும் தயாராக இருககிறதுஃ

ஆனா பதிலுக்கு உலகம் நம்மக்கிட்டயும் எதிர்பார்க்குது. அதுவும் நியாயமான எதிர்பார்ப்பு தான்.

ஆமாங்க வாழ்க்கை என்பதே கொடுக்கல் வாஙகல் தானே!

நாம எவ்வளவு உலகத்துக்கு கொடுக்கறோமோ அதைவிட பலமடங்கு உலகம் நமக்கு தருது.

உலகம் உருள நாம எந்த அளவுக்கு உதவி செய்கிறோமோ அதே அளவுக்கு உலகம் நமக்கு உதவுகிறது.

ஒரு தனிப்பட்ட ஆளுக்கு நாம தொடர்ச்சியா உதவிட்டிருக்கோம்னு வைத்துக் கொள்ளுங்களேன் அவன் நம்மளோட நெருக்கமான நண்பனாகிவிடுகிறான். ஒரு வேலைக்காரனுக்கு உதவினால் அவன் நம் மேல் வச்சிருக்கிற விசுவாசம் அதிகமாயிடுது. நாம என்ன சொன்னாலும் கேட்கிறதுக்கு அவன் ரெடியாயிடறான். எந்த வேலையையும் இவனை வைத்து சாதித்துக் கொள்ளலாம்.

அதே போல ஒரு குடும்பத்துக்கு நம் உதவி போகிறதென்றால் அந்த குடும்பம் நம்க்கு நன்றிக்கடன்பட்டுவிடுகிறது. நாம் கேட்காமலேயே நமக்கு எதையும் செய்யத் தயாராகிவிடுகிறது.

நம் சேவைகளை உதவிகளை ஒரு ஊருக்கு கொடுக்கிறொம் என்றால் அந்த ஊரே நம் பின்னால் அணிவகுக்கிறது. நம்மை தலைமையேற்கச் சொல்கிறது.

நம் சேவையை நாட்டளவில் உயர்த்தும்போது நாம் தலைவனாகிறோம். நாட்டளவில் நாம் புகழடைகின்றோம். நாட்டுககே தலைமையேற்கிறோம்.

ஆகவே நாம் நாமை் எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுகிறோமை். எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவும் பெறுகின்றோம்.

நம்மளோட உதவி மத்தவங்களுக்கு எப்பவும் இருந்துட்டே இருக்கணும். எப்ப நாம அடுத்தவங்களோட தேவைகளை நிறைவேற்றுவதை நிறுத்துகிறோமோ அன்னிக்கே உலகம் நம்மை மறக்க ஆரம்பிச்சிரும்.

பிஸனஸே எடுத்துக் கொண்டாலும் மக்களுக்கு எது கிடைக்கவில்லையோ எது மிக முக்கிய் தேவையோ அதை நாம் கொடுக்கும்போது நம் பிஸினஸ் சக்கை போடு போகிறது. நுான் விக்கிறத தான் நீ வாங்கணும் என்று ஆரம்பிக்கும் பிஸினஸ் சீக்கிரமே படுத்துவிடுகிறது.

பணக்காரனாக (அல்லது பணக்காரியாக வேண்டும்.. அப்பாடா தலைப்பைப் பிடிச்சாச்சு!!) வேண்டும் என்று ஆசைப்படுவதோடு நம்மில் பலர் நினறு விடுகின்றோம். பணம் உள்ளவர்கள் தாமாகவே நம்மிடம் வந்து அந்தப் பணததை நம் பாக்கெட்டில் வைக்க வேண்டுமென்றால் அவர்கள் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் அவர்கள் விரும்புவதை நாம் கொடுக்கும்போது நாம் விரும்பும பணத்தை அவர்கள் தருகிறார்கள்.

பணம் உள்ளவனுக்கு ஆயிரம தேவைகள். சாதாரண மனிதனைவிட அவனுக்கு அதிக தேவைகள்.

அதை நிறைவேற்ற அவன் என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளான்.

அதை நிறைவேற்றும்போது அந்தப் பணம் நம் கணக்குக்கு வருகிறது,

நம் மனதின் விரிவைப் பொறுத்து தான் வாழ்வின் வளமும் அமைகின்றது.

எடிசன் பல்பைக் கண்டுபிடித்து அவர் டேபிளிலில் அவருக்கு மட்டும் வைத்திருந்தால் அவரை யாருக்குமே தெரிந்திருக்காது. உலகத்துக்கு அவர் சமர்ப்பித்ததால் தான் உலகம் வெளிச்சம் அடைந்தது. அவர் புகழ் எங்குதம் பரவியது.

கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும் உலகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண தனது நேரத்தையும் சக்தியையும் செலவழி்த்து எதைக் கண்டுபிடித்தாலும் அதை மக்களுக்கே அர்ப்பணிக்கிறார்கள். அந்த விரிந்த மனம் அனைவருக்கும் வரும்போது நம்மை கைகொடுத்து உயர்த்திவிடவும் நம் கழுத்துக்கு மாலைகள் தரவும் உலகம் தயாராகிறது.

கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமேயில்லை என்கிறீர்களா?

அன்பு செலுத்துங்கள். மனதார பாராட்டுங்கள். மரியாதை செய்யுங்கள்.

அன்புக்கும் பாராட்டுக்கும் மரியாதைக்கும் மயங்காத உள்ளங்கள் உலகத்தில் எங்குமே இல்லை. (என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு என் உயிரையும் கொடுப்பேன் போன்ற பேச்சுக்களுக்கு நாம் மயங்குவது மாதிரி)

அடுத்தவனின் தேவைகளை நாம் உணர்ந்து அதை புர்த்தி செய்யும்போது நமது தேவைகள் தானாக நிறைவேறுகிறது.

நான் உண்டு என் வேலை உண்டு என்று கையை இறுக மூடிக்கொண்டிருப்பவரகள் உதவி வந்து கதவை தட்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

சொறிய சொறிய சுகம்!!!

மனசோட குரங்குப் புத்தியில ஒண்ணு நாம மறக்க விரும்பற ஒரு விஷயத்தை ரிப்பீட் பண்ணிட்டே இருக்கறது.

வேண்டாம்னு நாம எது நெனச்சாலும் வேண்டும்னு திரும்ப திரும்ப அதையே நினைக்க வச்சி குமைய வைக்கிறது நம்ம மனசு.

இப்ப ஒருத்தருக்கும் நமக்கும் ”சரிப்பட்டு” வரலன்னு வச்சுக்குவோம். சரி ஒழியறான் விடு நாம நம்ம வேலைய பார்ப்பம்னு இருந்தா முடியுதா?

பாழாப்போன மனசு அவனப்பத்தியே யோசிச்சிடடு இருக்கும்.

அவன் எங்க போறான் என்ன பண்றான் எவன் கூடப் பேசறான் அப்படிப் பேசினா நம்மளப் பத்தி தான் பேசறானா? சிரிச்சா நம்மளத்தான் நக்கல் பண்றானா? ரகசியமா ஏதோ செய்யறானே? குசுகுசுனு போன்ல பேசறானே.. என்னவா இருக்கும். புதுசா ஏதாவது ட்ரை பண்றானோ? நமக்கு எதிரா ஏதாவது சதி பண்றோனோனு மனசு கிடந்து குமையற குமைச்சல் இருக்கே

அதல்லாம் ஒண்ணும் இல்ல அந்த திங்கிங்கையே விட்டுருவம்னு நெனச்சா முடியுதா?

அதோட தொடர்ச்சியா மனசு அடுத்தக் கட்டத்துக்கு தாவும்.

சம்பந்தப்பட்ட ஆளை எப்படியாவது பழிவாங்கணும்னு மனசு திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்கும. அதற்கான வழிவகைகளை கற்பனைக் கோட்டைகளை கட்டிக் கொடுக்கும். அதெலலாம் நடக்காதுனு மனசே திரும்பவும் நம்ம கிட்டயே சொல்லி நம்ம குழப்பி விட்டுரும்.

அவனோட கன்ட்ரோல் நம்ம கைல இல்லை எனும்போது அவனப்பத்தி ஏதாவது கண்ணு காது மூககு வச்சி பரப்பர வேலைய தீவிரமா ஆரம்பிப்போம். அதனால் நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லை. ஆனா ஏற்கனவே மனசு அரிச்சுக்கிட்டு இருக்கும்போது நாலு பேருகிட்ட அவன பத்தி தப்பா சொல்லி அவரும் தலையாட்டிட்டா அது சொறிஞ்சு விட்ற சுகத்தைக் கொடுக்கும்.

அதோட பெரிய சுகம் யாராவது ஒருவர் தானா வந்து நம்மகிட்ட அவனப் பத்தி சொல்லி சொறிஞ்சுவிடறது.

அந்த இன்னொருத்தனுக்கு ஒரு நல்லது நடந்தா நம்ம மனசு புகஞ்சு போயிடுது. கெட்டது நடந்திடடா நமக்கோ கும்மாளம். ஏன் இப்படி அழிஞ்ச புத்தி நமக்கு?

ரெண்டு உறவுக்காரங்களுக்கிடையே ஏதோ பிரச்னையாயிடுச்சு.ஒருத்தர் மட்டும் அத மனசுல வச்சிக்கிட்டு இன்னொருத்தர பத்தி தப்பு தப்பா சொல்லிட்டிருப்பார்.

”பங்களா டைப்பில வீடு கட்டிட்டுருக்கான். எப்படி சம்பாதிச்சிருப்பான்னு நினக்கிறீங்க. அவனப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். அவனோட ஹிஸ்ட்ரி எனக்கு அத்துப்படி” என்று வரவன் போறவன்கிட்ட எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார.

”அந்தாளுக்கு கிறுக்கு புடிச்சிப் போச்சா. தேஞ்ச ரெக்கார்டு மாதிரி அதையே சொல்லிட்டிருக்கார். நானும் எவ்வளவோ பேச்ச திருப்பி விட்டு பார்த்தேன். மறுபடி மறுபடி அத தான் பேசறார்” என்று சொன்னவருடைய மனசைப் புட்டு புட்டு வைத்தார் இன்னொருவர்.

”ரொம்பவும் பாதிச்சிட்டார் போல.சரி விடுங்க”

”அதில்லீங்க வீடு கடடறவர் புதுவீட்டில் சாரம் சரிஞ்சு விழுந்துருச்சு. இந்தாள் என்னான்னா கட்டுமானமே சரிஞ்சிருச்சி உழைச்ச காசு தானே சரியா ஒட்டும்னு சொல்லிட்டிருக்கார்.”

கொஞ்சம் நெனச்சிப் பார்த்தா இந்த மாதிரி கருவிக்கிடடே இருந்தா ஒவ்வொரு நாளும் நம்ம மனநிலை எப்படி இருக்கும்?

மனசு குப்பைத் தொட்டியா மாறிப்போகும்.

இந்த மாதிரி மனநிலை நாம எல்லாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில அனுபவிச்சிருப்போம். அப்புறம் மறந்திருப்போம்.

அதுவரைக்கும் ஓக்கே தான்.

இந்த வகை பழிவாங்கும் மனப்பான்மையும் பொறுமலும் தினசரி இருந்ததுன்னா -

நம்ம மனசு வலுவிழந்துவிடட்து என்று அர்த்தம்

அதாவாது முத்திப் போச்சு.

ஆத்திரத்தை அடக்கினாலும்……..!

நம்ம தாத்தாவோ மாமாவுா இல்லை நமக்கு பிடித்த வேறு யார் முகத்திலோ அல்லது உடையிலோ ”உச்சா” அடித்துவிடும் சந்தோஷம் நம் கைக்குழந்தைப் பருவத்துடன் முடிவடைந்துவிடுகிறது. அந்த சுதந்திரம் அந்த வயசுக்கு மட்டும் தான்.

மூணு நாலு வயசில் நாம் பாட்டுக்கு நம் படுக்கையை நனைத்தால் கூட விசிறி மட்டையால் அடிவாங்க வேண்டியிருக்கிறது. ”ஒன்றசை கழுத வயசாவுது இன்னும் பெட்டுல போவுது பார்” என்ற அலாரத்துடன் தான் எழ வேண்டிய கட்டாயம்.

அப்புறமா ஸ்கூல் போனதுக்கப்புறமும் அவசரத்துககு வாத்தியார் கிட்ட சுணடு விரலை உசத்தி காட்டிக்கிட்டு நிக்க வேண்டி இருக்கு

சரி இவ்வளவு அவசரம் ப்ளஸ் முக்கியமான மேட்டர பத்தி நம்ம கிட்ட போதுமான அளவுக்கு ”விழிப்புணர்வு” இருக்கானு கேட்டா இல்லனு தான் சொல்லணும்.

”சம்பந்தப்பட்ட விஷயம்” டிஸ்சார்ஜ் ஆகும்போது ”மத்த” விஷயம் மாதிரி ”ஸ்மெல்” இருக்கிறதில்லை. அதனால் தான் அந்த விஷயத்தை நாம கண்டுக்கிடறதே இல்லை.

எந்த ஊரை எடுத்துக்கிட்டாலும் அங்க எது இருக்குதோ இல்லியோ கண்டிப்பா ஒரு மூத்திர சந்து இருக்கும். அங்க ஒரு முட்டுச் சுவரில் ஆரம்பித்து அவரவரின் திறமைக்கு தக்கவாறு ஆசியா மேப்பிலிருந்து இலங்கை மேப் வரை போட்டு வைத்திருப்பார்கள். இத்தனைக்கும் ”இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது என்று எழுதி வைத்திருப்பார்கள். (பிலிப்பைனிகள் வண்டியை நிறுத்தி அதன் டயரில் தான் குறிபார்த்து அடிக்கிறார்கள். இதற்கான உளவியல் காரணம் என்னவென்று தெரியவில்லை!!) அந்த இடத்தை நாம கடந்து போகும்போது நம்மை அறியாமல் கர்ச்சீப்பால் மூக்கை மூடிக் கொள்வோம். அந்த ”கப்”பிலிருந்தே தெரியும் இது ஒரு ”கழிவு” என்று. உடம்புக்கு தேவை இல்லை என்று புறந்தள்ளும் கழிவு.

அதில எத்தனை ஆயிரம் கிருமிகள் சஞ்சாரிக்கிதுன்னு லேப் டெக்னிஷனியனைக் கேட்டா தெரியும். நம்ம உடம்புல என்ன பிரச்னை என்று பார்க்க டாக்டர்கள் ”இதை” தா்ன பிடித்துக் கொடுக்க சொல்கிறார்கள்.

அப்படிப் பட்ட ஒரு மேட்டரை சப்ப மேட்டர் என்று நம்மால் தள்ள முடியாது.

நாம ஏதாவது சாப்பிட்டா வாய் கொப்புளித்து சுத்தப்படுத்துகிறோம் பிரஷ் பண்றோம். ஜலதோஷம் பிடிச்சிட்டா அடிக்கடி மூக்க க்ளீன் பண்றோம். ஆனா ”விசில” அடிக்கிறத மட்டும் போற போக்கில் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கோம்.

டெய்லி ரெண்டு தடவை பிரஷ் பண்ணுங்கனு சொல்ற டாக்டர்ஸ் கூட இதைப் பத்தி வாய திறக்கிறதே இல்லை.

இன்னொரு விஷயம் நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும் இதை பாத்ருமில் தான் செய்யணும்னு அவசியம் இல்லாம போச்சு கிடச்ச இடத்தில் அடிச்சு விட்டறலாம். ஓப்பன ஏரியாவா இருந்தா பிரச்னை இல்லை. ஜனக்கூட்டம் நிறைந்து வர்ழும் நெரிசலான நகரப் பகுதிகளில் எவ்வளவு சுற்றுச் சுழல் சீர்கேடு.

பப்ளிக் டாய்லெட்ஸ் நம்ம நாட்ல கம்மி. அப்படியே இருந்தாலும் மெயின்டனஸ் கிடையாது. ’குறிப்பிட்ட” இடத்துக்கு போய் சேருவதற்கே கம்பி மேல் நடக்கத் தெரியவெண்டும். குப்பைத் தொட்டியைச் சுற்றி நிறைய குப்பை குவிந்திருப்பது போல எந்த இடத்தில் செயயணுமோ அதைச் சுற்றி செய்திருப்பார்கள். அசந்து போய் சுவற்றில் சாய்ந்தோமோ தொலைந்தோம்.

இது மாதிரி லாங் டுர் போகும்போது எப்படா வண்டியை நிறுத்துவான் என்று பிரசரில் இருப்போம் இறங்கியபிறகு அவங்க டாய்லட்டில் தான் ஜிப்பை இழுக்கணும். (அங்க உள்ள அசிங்கத்தை நினச்சி வெளில எங்கயாவது இருக்கிறதே பெட்டரா இருக்கும்) வெளியில் ஊய் ஊய்னு கத்த மோட்டல் காரங்க ஆளுங்களை வச்சிருக்காங்க.

அதைத் தான் கழுவல அட்லீஸ்ட் முடித்துவிட்டு கையையாவது கழுவிவிட்டு வரலாமே.

ஒரு கேம்பில் ஒரு பப்ளிக் டாய்லட்டில் நான் உள்ளே நுழைந்தபோது நம்ம ஃப்ரண்ட் நின்று ”அடித்துக்” கொண்டிருந்தான். என்னைப் பார்த்த மாத்திரத்தில் கையை மாற்றிவிட்டு வலது கையை உயர்த்தி ”வணக்கம் பாய“” என்றான். எவ்வளவு மரியாதையானவன் என்று நினைத்துக் கொண்டு ”ஸாரி டிஸ்டப் பண்ணிட்டன் போலிருக்கு” என்று சொல்லிவிட்டு நகரந்து தான் போனேன்.

பின்னாலயே வந்து சிநேகத்துடன் கைகுலுக்கிவிட்டான்.

இன்னொருத்தன் முன்னிரவில் எழுந்து வெளியே ஓடுவான். எஙகயாவது நின்று கொண்டு அடித்துவிட்டு விழுந்தடித்து ஓடிவந்து படுத்துப் போர்த்திக் கொள்வான். ”நின்னுக்கிட்டு அடிச்சியே. காலையாவது கழுவினியா” என்றால் ”தண்ணி பட்டா உறக்கம் கலஞ்சிடும்” என்பான். இன்று கால்பககம் வந்த போர்வை நாளை முகத்துப்பககம் வந்தால் என்னாகும்?

எல்லாத்துக்கும் அச்சாரமாக எனது முன்னாள் பாஸ்க்கு (கொரியன) ஒரு நிமிஸத்தைக் கூட வீணாக்கப் பிடிக்காது. பாத்ரும் செல்லும்போது கூட ஒரு கத்தை பேப்பரை பாத்ருமுக்கு எடுத்துப் போய்விடுவார். கடைசியில் அந்த பேப்பர் எனக்குத் தான் வந்து சேரும். கையில் கிளவுஸ் போட்டுக் கொண்டா வாங்க முடியும்.

ஒரு தடவை பள்ளிப் பருவத்தில் தொலைதுர கிராமத்தில் சொந்தக்காரர் வீட்டு கல்யாணம். முதல் நாளே போய்விட்டோம். பக்கத்தில் உள்ள டவுனில் தான் தியேட்டர் இருக்கிறது கமல் படம் ஓடிக் கொண்டிருக்க செகன்ட் ஷோ பார்ப்பதற்காக நானும் இன்னொரு ஃப்ரண்டும் திட்டம் போட்டு ஒரு சைக்கிளை கடன வாங்கிக் கொண்டு போய்விட்டோம். நள்ளிரவில் படம் முடிந்து திரும்பும்போது கரண்ட கட். டவுனிலிருந்து கிராமம் வரை இருளோ என்று இருந்தது. தட்டுத்தடுமாறி அவன் வணடி ஓட்ட நான் கேரியரில்.

திடிரென்று வண்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டு

ரொம்ப முட்டுதுடா இரு வரேன் என்றவன் அவசரமாக இருளில் மறைந்தான். நான் பேய் முழி முழித்துக் கொண்டு நின்றுக் கொண்டிருக்க

போன வேகத்தில் திரும்ப ஓடிவந்தான்.

என்ன நடந்தது என்றால் வயல் பக்கம் தான் என்று நினைத்துக் கண்ணை மூடி சுகமாக இருந்துக் கொண்டிருக்கும்போதே

”ஏன் அங்கய முடிச்சிட்டிங்க. வீட்டுக்குள்ள வந்து நடுக்கூடத்தில இருக்கலாம்ல” என்று குரல் கேட்டிருக்கிறது.

அப்பத்தான் தெரிந்தது காற்றுக்கு வீட்டு வாசப்படியில் உட்காரந்தவர் பக்கத்தில் இவன் அசிங்கம் பண்ணியிருக்கிறான் என்று.

அந்தத் தொழில் கேவலமா?

விவேகானந்தர்தெரு துபாய் குறுக்குச் சந்து என்ற பார்த்திபன் வடிவேலு காமடியை நாம் எல்லாருமே ரசச்சிருப்போம். அதில் சந்தடி சாக்கில் வடிவேலு துபாயில் கக்கூஸ் கழுவிவிட்டு ஊருக்கு வந்து பளிச்சென்று திரிவது போல சொல்லி கேவலப்படுத்தியிருப்பார் பார்த்திபன்.

வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் கக்கூஸ் கழுவும் வேலை தான் பார்ப்பதாக எடுத்துக் கொண்டால் இங்கு அனைவைருக்கும் பிரதான தொழில் தின்பதும் கழிவதும் தான் என்றாகிறது. அல்லது நம் நாட்டில் நாம் கக்கூஸ் கழுவாமலேயே மேல மேலே ”ஆய்” போவது போலவும் அல்லது வளைகுடாவில் மட்டும் தான் கக்கூஸ் இருப்பது போலவும் கருத்து தொனிக்கிறது.

அப்படியே வைத்துக் கொண்டாலும் அது ஒண்ணும் கேவலமான தொழில் இல்லையே! செய்யும் தொழிலே தெய்வம் என்று போற்றுகின்ற மக்கள் உள்ள இந்திய நாட்டில் ஒரு சில தொழில்களை மட்டும் மட்டம் தட்டுவதும் அதை செய்கின்றவர் ஒதுக்கப்பட்டவராக சித்தரிப்பதும் ஆதிக்க மனப்பான்மை அன்றி வேறு என்ன? மேலும் கக்கூஸ் கழுவறவன் ஊருக்கு பொண்டாட்டி புள்ளைய பார்க்க வரும்போது பளிச்சென்று இருக்காமல் சென்ட் அடித்துக் கொள்ளாமல் விளக்குமாறும் மோப்புமாக கையுமாக அதே பொஸிஸனில் அலைய வேண்டுமா என்ன?

பொய் சொல்லத் தெரியவில்லை. பிறரை ஏமாற்றத் தெரியவில்லை வேறு எதுவும் குறுக்கு வழிகள் தெரியவில்லை. வயசான அம்மா அப்பாவைக் காப்பத்தணும் பொண்டாட்டி பிள்ளைக்கு சோறு போடணும் நல்ல துணி உடுத்த வைக்கணும் தங்கச்சிய கரையேத்தணும் அப்படிப்பட்டவன் என்ன செய்வான? ஆயிரம் ருவா கடனாக் கேட்டாக் கூட முன்னபின்ன யோசிக்காம எடுத்து்த தர நமக்கு மனசு இருக்கிறதா? கையேந்த அவனுக்கும் மனசு இல்லை. வேற வழியில்லாமல் பொண்டாட்டி பிள்ளய விட்டு தாம்பத்ய சுகத்தை விட்டு குடும்பத்த விட்டு ஊரைவிட்டு நாட்டைவிட்டு கிளம்பறான்.

”அங்க போயி கக்கூஸ் கழுவறதுக்கு அந்தக் கருமத்த இங்கயெ செய்யலாமே”னு கூட சில பேர் கேக்கலாம்.

வெளிநாட்ல அந்த வேலை செஞ்சிட்டு வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்கு வரவனையே பொறுத்துக்க முடியாம இப்படி கேவலப்படுத்தற நாம ஊருல உள்ளுர்ல கழுவறவனை எப்படி கொண்டாடுவோ்ம்?

வளைகுடா நாடுகள்ள இந்தமாதிரி வேலை செய்யும் ”ஜானிட்டர்கள” முதலாளிகள் மற்றும் மேனேஜர்களின் செல்லப்பிள்ளைகள். மற்ற தொழிலாளர்களைவிட் இவர்களே மேலாண்மையின் நெருக்கத்தில் இருக்கின்றனர். அரபிகளுடன் (நான்கு பேர் சாப்பிடும்) ஒரே தட்டில் இவர்களும் சேர்ந்து உண்பதைய பார்க்கலாம். சம்பளம் தவிர சொந்த பணத்திலிருந்து மாதம் நுறு இருநுறு ரியால் இவங்க பாக்கட்டுக்கு வரும்.

நம்ம ஊருல ஒரு விஸேஷம் குழந்தை படிப்பு கல்யாணம் என்றால் தனி கவனிப்பும் உண்டு.

இவங்களோட சம்பளம் குறைவு அதே மாதிரி வேலை நேரமும் குறைவுதான். தினசரி ரெண்டு மணி நேரத்துக்கும் மேல இவங்க வேலை இருக்காது.

ஓய்வா இருக்கிற நேரத்தில் ஆபிஸிலேயே பெப்ஸி பிஸ்கட் பிரட் ஜீஸ் என்று விற்கிறாங்க. வெளியிலிருந்து லஞ்ச் அரேஞ்ச் பண்றாங்க அதுக்கு தனி கமிஷன் கிடைக்கும். மொபைல் சிம் கார்டு கூப்பன் எல்லாம் விக்கிறாங்க. கார் கழுவறாங்க. இதில் எல்லாம் இவங்களுக்கு என்ன கிடைச்சிறப்போவுதுனு யோசிக்கிறீங்களா? எங்க ஆபிஸ் ஜானிட்டர் இங்க செலவு போக ஊருக்கு அவர் அக்கவுண்டுக்கு மாசம் 50000 அனுப்பறார் நம்ப முடியுதா? தவிர அவர் கையில் எப்பவும் காசு பணம் புரளும்.

லட்ச ருவா சம்பளம் வாங்கற என்ஜினியருங்களே சம்பளம் வாங்கி மொத்தத்தையும் ஊருக்கு அனுப்பிடடு அடுத்த நாள் பிச்சை எடுப்பாங்க. ஆனா இந்த மாதிரி ஜானிட்டர்ஸ் கையில் தினம் தினம் பணம் புழங்கும். இந்த மாதிரி வாய்ப்பு எல்லர்ருக்கும் கிடைக்குமா என்று தான கேட்கறீங்க. வாய்ப்பு கிடைக்கல. அவங்களெ உருவாக்கிக்குவாங்க.

Sசரி அந்த பழைய காமடி எதுக்கு நாபகம் வந்துச்சுனு கேட்கறீங்களா?

எங்க உறவினர் பையன் ஒருவனை அவன் பள்ளி ஆசிரியர் அப்பா என்ன பண்றார் என்று வகுப்பில் கேட்டிருக்கிறார். துபாயிலிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறான் பையன். துபாயில் என்ன கக்கூஸ் கழுவுறாரா என்று டீஸ் பண்ணவே கிளாஸ் மொத்தமும் சிரித்திருக்கிறது. பையன் குறுகிப் போய் வீட்டில் சொல்ல பையனின் மாமா விஷயத்தை கலெக்டர் வரை கொணடு போய் கடைசியில் அந்த ஆசிரியர் எல்லார் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வைத்தார்.

துபாய் என்றால் நம்மவர்களுக்கு நாபகம் வருவது ஒன்று எண்ணெய்க் கிணறு அல்லது ஒட்டகம்.

அங்கு வேலை செய்கிறவர்கள் ஒன்று கக்கூஸ் கழுவணும் அல்லது ஒட்டகம் மேய்க்கணும்.

எப்பத்தான் மாறுவதாக ஐடியா?

சமீபத்தில் எங்க கம்பெனியில் வேலைக்கு சேர்நத என்ஜினியர் அவர் பாட்டியிடம் சவுதியில் வேலை கிடைத்திருக்கிறது எனறு தெரிவித்திருக்கிறார். அதற்கு அந்தப் பாட்டி ”மனுஷ மக்க உள்ள ஊருக்கு போக மாட்டியா? அங்க வெயில்ல ஒட்டகம் தான் மேய்க்கணுமாமே. உன்னால முடியுமா” என்று கேட்டிருக்கிறார்

அப்போது அவர் முகம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

”உங்களப் பத்தி பாட்டிக்கு தெரிஞ்சிருக்குப் பாருங்க” என்று அவர் சொன்னதும் தான்

சிரிப்பை நிறுத்திக் கொண்டேன்.

நோண்ட விடலாமா?

நாம பாட்டுக்கு நம்ம ருட்டுல போயிட்டிருப்போம். அத கலச்சி மாட்டிவிடறதுக்குன்னே சில பேர் நம்ம தேடி வருவாங்க

நமக்கும் இன்னொருத்தருக்கும் ”ஆகாத” நிலை வந்துடுச்சுனு வச்சுக்குங்களேன். ”இவன் கூடவெல்லாம் மல்லடிக்கணும்னு விதி. என்ன செய்றது”னு விதிய நொந்துக்கிட்டு ”அவன் அவன் ருட்டுல போகட்டும் நாம நம்ம ருட்டுல போகலாம்”னு முடிவெடுத்து சைலன்டா இருந்திட்டிருப்போம்.

ஆனா இது எப்ப நேரும்னு காத்திருந்த மாதிரி சில பேரு சர்வே எடுத்திட்டு நம்மகிட்ட வந்து சேருவானுங்க.

“என்னடா. ஒரு மாதிரியா இருக்கே – அவனும் மூஞ்ச உர்ருனு வெச்சிருக்கான் ரெண்டு பேருக்கும் இன்னிக்கு என்னாச்சி? ” என்று உரிமையோடு தோளில் கை போட்டு எவனாவது கேட்க வந்தால் உங்க காதுகளை விரைத்துக் கொண்டு உஷாராகி விடுங்கள்.

”அப்டிலாம் இல்ல. அவன் ஏதாவது மூட் அவுட்ல இருப்பான்” என்று நீங்க சொல்லிட்டா நீங்க சேஃப் சைடுல இருக்கிறதா அரத்தம்.

அதை விட்டு்ட்டு -

”என்னவாம். என்ன பத்தி ஏதாவது சொன்னானா” என்று நீங்க ஆரம்பித்து வைத்தால்

சனியன் சடை பின்ன ஆரம்பிச்சிடுச்சினு அர்த்தம்!

யார்கிட்டயாவது சொன்னா தேவலை போன்று தான் இருக்கும். சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று பின்னர் தான் தோன்றும்.

சும்மா கிடந்த சங்கை ஏன் ஊதிக் கெடுக்க வேண்டும்.

யார்கிட்ட தான் குறை இல்லை. எவன் தான் ஒழுங்கா இருக்கான். நம்மோட அலைவரிசையோட எல்லாரும் ஒத்துப் போகணும்னு நினைக்கிறது தப்பில்ல தான்.

ஆனா பிராக்டிகலா அதெல்லாம் நடக்காது.

இன்னிக்கு எதாவது முரண்பாடா நடந்தச்சுன்னா பேசாம – யார்கிட்டயும் சொல்லாம அத்தோட விட்டுடறது தான் பெட்டர். அதை விட்டுட்டு ஆறுதலுக்காக அடுத்தவன்கிட்ட சொல்லி வச்சா -

அவன் அதை கண்ணு காது மூக்கு வச்சி அந்தப் பக்கம் சொல்லாம இருக்க மாட்டான்.

வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள எடுத்து விட்ட அனுபவங்கள் நம்ம எல்லாருக்கும் நிச்சயம் இருக்கும்.

சின்ன க்ராச்சுக்குள்ள உளிய வச்சி பிளந்துவிட நிறைய பேரு உளியோட திரியறாங்க.

ரொம்ப முடியலைன்னா பாத்ரும்ல போய்-

ஒரு கண்ணுக்கு அழுதுட்டாலும் ஆத்திரம் அத்தோட தீர்ந்துடும்.

மூணாவது மனுசன்கிட்ட மட்டும் சொல்ற வேலை வச்சிக்க கூடாது.

இன்னிக்கு ஆகாது போனவன் நாளைக்கே நமக்கு தேவையா இருக்கலாம். இல்லாட்டி அவன் இந்த விஷயத்தை பெரிசா எடுத்துக்காம நாளைக்கே நம்ம கூட உயிருக்கு உயிரா வர சான்ஸ் இருக்கு

அவசரப்பட்டு வாய திறந்தா எல்லாத்துக்கும் ஆப்பு தான்.

”உன்கிட்ட நான் சொன்னத ஏண்டா அவன்கிட்ட சொன்னேனு” கேட்டுபபாருங்க. கம்பி மேல நின்னு சத்தியம் செய்வான் நான் சொல்லவே இல்லனு.

சுவத்துக்கு கூட காது இருக்கும்னு சும்மாவா சொன்னாங்க

பகல்ல பககம் பாத்து பேசணுமாம். ராத்திரில அதுவும் பேசக் கூடாதாம்.

பகலோ ராத்திரியோ நம்ம வாயில பிளாஸ்திரி ஒட்டிக்கிட்டா

நட்போ உறவோ அது பாட்டுக்கு வளரும்.

உங்களுக்கு செக்ஸ் தேவையா?

புள்ளங்க தோளுக்கு மேலே வளந்தாச்சு இனிமே அதைப்பத்தி எல்லாம் சிந்திக்க முடியாது என்றொரு பேச்சு (விரக்தியான பேச்சு?) பல நடுத்தர வயசுக்காரங்க கிட்ட அடிக்கடி கேட்கலாம். செக்ஸ் பத்தி பேசினாத் தான் இப்படி ஒரு புலம்பல்.

கலாச்சாரம் வயசு கௌரவம் என்று ஏகப்பட்ட முகமூடிங்களை போட்டுக்கிட்டு இயற்கையா அனுபவிக்கிற பல விஷயஙகளை அனுபவிக்காம வீணாக்கிட்டு இருக்காங்க.

குறிப்பிட்ட வயசுக்கு மேலே தனக்குத தானே வேலி போட்டுக்கிட்டு கணவன் மனைவி உடல் அளவில் பிரிஞ்சிடறாங்க.

அட்லீஸ்ட் ஒரே ருமில் ஒண்ணாக் கூட படுக்கறது இல்ல.

வயசான புருஷன் பொஞ்சாதிங்க எத்தனையோ சந்தோஷமான தருணங்களில் இருந்தாலும் ரெண்டு பேரும் மனசுவிட்டு சிரிக்கிறது கூட இல்லை. மத்தவங்க முன்னிலையில முகத்தை இறுக்கமா வச்சிட்டுத் தான் இருக்காங்க. அப்பத்தான் மத்தவங்க மதிப்பாங்களாம். என்ன இளஞ்சோடிங்க மாதிரி கொஞ்சி சிரிச்சிட்டுருக்காங்கன்னு மத்தவங்க கேட்டுறக்கூடாதேனு போலி கௌரவத்தில் வாழ்க்கைய நகர்த்திட்டு இருக்காங்க

செக்சுங்கறது ஒவ்வொரு உயிரினத்துக்கும் முக்கியமானது. முக்கியமா நம்ம மாதிரி மனுஷப்பயலுங்களுக்கு ரொம்ப ”ஆறுதல்” அளிக்கக் கூடிய விஷயம். இதைப் போயி வேணாங்கலாமா?

நடுத்தர வயசுக்கு மேலே அழுத்தற குடும்பச் சுமைங்களும் பெருகி வரும் தேவைகளும் கொடுக்கும் நெருக்கடியில் வயசானவங்களுக்கு வரக்கூடிய மன அழுத்தத்துக்கு சரியான மருந்து செக்ஸ் தான்.

அந்த காலகட்டத்தில் செக்சுக்கான தேடல் குறைவாக இருந்தாலும் இருக்கிற ஆர்வத்தை பய்ன்படுத்தி உடலுக்கும் மனசுக்கும அமைதிய ஏற்படுத்திக்கிறது நல்லது.

நம்ம புள்ளங்க இருக்காங்கற விஸயத்தை ஒரு தடையா எடுத்துக்காம நாம அவங்களுக்கு நம் அன்னியோன்யத்தை காட்டுற ஒரு முன்மாதிரியா அதை எடுத்துக்கணும்.

உரிக்க உரிக்க வெங்காயமா எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாம நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் கணவன் மனைவிக்கிடையே உடலளவில் பிரியறது நல்லது இல்லை

உடல்பிரிவு இரணடுபேருக்கிடையே மனசளவில் பிரியறதுக்கும் ஒரு காரணமா அமையும். மனசளவில் பிரியும்போது கணவன் என்பவன் பேருக்குத்தான் மனைவி என்பவள் பேருக்குத்தான் என்று ஆகும். அப்படி பிளவு அதிகமாகும்போது சுவாரஸ்யமற்ற நடைபிண வாழ்ககை தான் மிஞ்சும்.

செக்ஸ் இல்லாமல் காதல் இல்லையா இதை ஒத்துக் கொள்ள முடியாது என்று மல்லுக்கு நிற்பவர்கள காதல் என்பது சுவாரஸயமானது காமத்துடன் கூடிய காதல் இன்னும் சுவாரஸயமானது என்று புரிஞ்சிக்கணும்.

செக்ஸ் மூளைக்கும் நல்லது. மன அழுத்தத்தை குறைப்பதுடன் முடிவெடுக்க கூடிய திறனையும் கொடுக்கும். மந்த புத்தியையும் போக்கும்.

நம்ம ஊர் நாட்டில் சும்மா விட்டேத்தியா திரிஞ்சிட்டுருக்கிற ஆட்களைப் பத்தி பேசும்போது – ஒரு கால் கட்டுப் போட்டா எல்லாம் சரியாயிரும் என்று வைத்தியம் சொல்வார்கள். கால்கட்டு என்பது கல்யாணம் தான் என்றாலும் தேன் குடித்த நரிக்குத் தான் பல்பு பிரகாசமாக எரியும் (மூளையத்தான் சொன்னேங்க!!) பொறுப்புணர்வு வரும் என்று சொல்லப்படடுள்ளது.

”அது” அனுபவிக்கிறவங்க மூஞ்சியில உள்ள தெளிவும் அமைதியும் அதை மறுக்கறவங்க மூஞ்சியில இருக்காதுங்க.

யாராவது கடு கடு மூஞ்சி உங்களுக்கு நாபகம் வந்தா அவங்களுக்கு ”அது” கிடைக்கல அல்லது தேவையான அளவுக்கு கிடைக்கலணு நெனச்சிக்குங்க.

ஆகவே இனிமே குழந்தை இல்லாத வீட்ல கெழவன் துள்ளி விளையாடறான என்ற பயமெல்லாம் இல்லாம சும்மா துள்ளி விளையாடுங்க.

இப்படி ஒரு துள்ளி விளையாடறவர் வயசு வித்தியாசம் இல்லாம என்னொட “ப்ரண்ட். அவர் சொன்ன உபரி தகவல் இது.

கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வப்பா்டடி வச்சிக்கணும்னு பெரியவங்க (அதாவது அவருக்கெ பெரியவங்களாம்!!) எதுக்கு சொன்னாங்க தெரியுமா தம்பி

அழகான பொண்டாட்டிய விட்டுட்டு இப்படி குரங்கு பின்னால சுத்றியடானு திட்டறதுக்கு தான் சொல்லிருப்பாங்க என்றேன் அப்பாவியாக.

அது தான் இல்லை கிளி நாம சொல்லிக் கொடுக்கறத தான் சொல்லும் ஆனா இந்தக் குரங்கு இருக்கே அது சொல்லாததையும்… என்று சொல்லிவிட்டு தெளிவாக வெட்கப்பட்டார்.

“அது”லயும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்.

இப்படித்தான் ”அனுபவிக்கிறதா?”

அனுபவிக்கிறது என்கிற வார்த்தை இப்பல்லாம் கெட்ட வார்த்ததையாகிடுச்சு.

ஒரு காலத்தில – நல்லா படிச்சி பெரிய வேலைக்கி போயி அழகான பொண்ண கல்யாணம் பண்ணிட்டு காரு பங்களானு வாழ்க்கைய அனுபவிக்கணும் என்பது ஒரு இலக்காக இருந்துச்சு. இன்னிக்கு தேதிக்கு இப்படி யாரும் யோசிக்கிறதா தெரியலை.

எப்படியாவது படிச்சி முடிச்சி நல்லா பே பண்ற வேலைக்கி போயி வாழ்க்கைய நல்லா அனுபவிச்சிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிறணும் என்பது தான் பல பேரோட எண்ணம். (நோகாம நொங்கு திங்கறது இப்படித்தான்!)

இதுல அனுபவிக்கிறதுங்கற வார்த்தைய தான் மெயினா ஆராயணும்.

இன்னிக்கு தேதிக்கு இளசுங்களைப் பொறுத்தவரைக்கும்”அனுபவிக்கிறது”ங்கறதுக்கு நேரடி அர்த்தம் – தண்ணியடிக்கிறதும் ஃபிகர்களோட ஊர் சுததறதும் தான். கல்யாணம்கிறது சந்தோஷ உலகத்துக்கான ஒரு என்ட்ரினு இப்பல்லாம் யாரும் நெனக்கிறதில்லை. அது ஒரு கடிவாளம்னு ஆயிடுச்சு. வரப்போறவ எப்படிப்பட்டவளோ அவகிட்ட நம்மோட ஒவ்வொரு முவமென்டுக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்கணும் எதுக்கெடுத்தாலும் நிக்க வச்சி கேள்வி கேப்பா. தேவையா இது.? கல்யாணம் பண்ற வயசா இது. நல்லா லைஃபை என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாமே.

காதல்ங்கற பெயர் பாப்புலரா வளர்ந்த காலத்தில ஒரு பொண்ணு கூட பேசறதே பெரிய விஸயம். (தாத்தா காலத்தில எல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் தனியா சந்திச்சிக்கிட்டாலே அவன் அவளை வச்சிருக்கான் என்றே அழைக்கப்படும். காதல் என்று பெயர் இருந்தாலும் அதுவே பெரிய கெட்டவார்த்தை!!)அப்படியே பேசிட்டாலும் ஐ லவ் யு சொல்றது பெரிய மேட்டர். நெரடியா சொல்றது பெரிய சிக்கல்னு இருந்த காலத்தில ஒரு லட்டர் எழுதி தட்டிவிட வேண்டியது. லட்டருக்கு பதில் சிக்னல் வர வரைக்கும் என்ன சொல்லித் தொலையப் போறாளோ என்று டெ்னசனில் நகம் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். (சில உலக அழகிகள் லட்டரை ஆஜானுபாகு தாய் மாமனிடம் ஃபார்வேடு செய்து நம் முதுகில் டின் கட்டியதும் உண்டு!)

ஒருவழியாக பச்சை சிக்னல் கிடைத்ததும் காதல் அங்கே இங்கே என்று வளர ஆரம்பிக்கும்.. அது கல்யாணத்தில் தான் முடியணும்னு எழுதப்படாத விதி.s கல்யாணம் வரை போகாட்டா அது காதல் தோல்வியாக கருதப்படும். தற்கொலை செய்து கொள்கின்ற காதலர்கள மிக அதிகமாக இருந்தது ஒரு நேரத்தில். என் கல்லுரி நண்பர்கள் இரண்டுபேரை இப்படித்தான் இழந்தேன்.

என் பள்ளிப் பருவத்தில எங்க ஊர் போஸ்ட் மாஸ்டர் பொண்ணு காதல் தோல்வியால் கயிறு மாட்டிக் கொண்டு இறந்தது நல்லா ஞாபகம் இருக்கு.

இப்பல்லாம் காதல தோல்வியால் தற்கொலை போன்ற செய்திகள் ரொம்ப ரேரா தான் வருது. முன்ன மாதிரி இல்லை. நமம காதலர்களுக்கு மனசில உறுதி வந்துடுச்சுணு சந்தோஷப்பட்டுக்க முடியாது. எது நடந்தாலும் அதை ஈஸியா எடுத்துக்கற மனநிலைக்கு மக்களை ஊடகங்கள் இழுத்துட்டு போயிட்டிருக்கு.அதனால உந்தப்படற இளசுங்க அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப் இல்லைன்னா அது தப்பில்லைங்கற நிலைக்கு வந்திட்டாங்க.

கற்பு எனபது மனசு இல்லை உடம்பு தான்னு கதைகள் கவிதைகள் பெண்களை முன்னேற்றுபவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள செகஸ டாக்டர்கள் இவங்களை வச்சி பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சொல்லிட்டிருக்கு.

கல்யாணம் பண்ணதுக்கப்புறமா புருனுக்கு.மனைவிக்கு உண்மையா இருந்தா போதும்னு புதுசு புதுசா தத்துவங்கள் ரிப்பீட் ஆகுது.

கற்புக்கு நடிகைகள் விளக்கம் சொன்னா நாம கேட்குற லெவலுக்கு வந்தாச்சு.

நான் தான் சறுக்கிட்டேன் நீயாவது பாத்து நடந்துக்க என்று சொன்னால் புத்தி சொலறதா எடுத்துக்கலாம். என்ன மாதிரியே நீயும் வந்து விழுந்துருனு நடிகைகள் கருத்து சொல்றாங்க. அதையும் நம்ம பத்திரிக்கைங்க வேல மெனக்கெட்டு பிரசுரிக்கிறாங்க. (நடிகைங்க எல்லாம் குடும்ப பெண்கள் இல்லையானு யாராவது குரல் உசத்தப் போறாங்க. நடிகைகள் குடும்ப பெண்கள் தான். ஆனா குடும்ப பெண்கள் எல்லாம் நடிகைகள் இல்லையே)

உடனே நாடு முழுக்க அந்த விஷயம் பத்தி தான் டிஸகஷன்.

டிவில டாக் ஷோவுக்கு அது தான் தீம்.

நம்ம சினிமா கவிஞர்களும் வட்டத்துக்குள்ள வாழ்ககையைில்லை வெளியே வந்து அனுபவினு தப்பு பண்ணாத வாழ்ககை என்ன வாழ்ககைனு நிறைய பாட்டு எழுதி விடறாங்க.

பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் இல்லைனனா என் மூஞ்சி யாருக்கும் பிடிக்காம போச்சேனு பெரிய கவலையாயிடுது.

இந்த லட்சணத்தில் யாராவது ஆசார அனுஷ்டானங்களை ஒழுங்கா கடைபிடிச்சாங்கன்னா அம்மாஞ்சி பழம் பஞ்சாங்கம் சுத்த கர்நாடகம் என்ற படட்ம் தான் கிடைக்கிது.

ஆக இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கு ஒத்துப் போக குறைந்த பட்ச தகுதி வத்தலோ தொத்தலோ ஒரு பாய் பிரண்ட் கேர்ளபிரண்ட் அப்புறம் அட்லீஸ்ட் ஒரு பீராவது அடிச்சிருக்கணும்.

இல்லண்ணா தாத்தாவாக்கிடறாங்க.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தண்ணி ஆறா ஓடுது.

எந்த விஷேஷம் வந்தாலும் தணிணி இல்லாம களைகட்டுறதில்ல. வீட்டுல ஒரு கல்யாணம்னா கூட முந்தின நாள் ஃப்ரண்சுஙகளுக்கு தீர்த்தம் காட்டியிருக்கணும்.

யாராவது ஒரு தும்மல் அடிஷனலா போட்டாக்கூட பாரட்டி வேணும்னு கேக்கிறாங்க. பார்ட்டினாவே அது தண்ணி பரர்ட்டிதான்!

தண்ணி அடிச்சது வெளில தெரியக்கூடாதுணு இருந்த காலம் எல்லாம் மலையேறிப்போச்சு. டீடெய்லா வெளில சொல்லி பெருமை அடிச்சிக்கிற யதார்த்த மனநிலைக்கு வந்துட்டோம்.

தண்ணி பழக்கம் எல்லாம் அவருக்கு இல்லை. ஏதாவது பார்ட்டினா லைட்டா எடுத்துக்குவார் – என்று பல மனைவி மார்களே ”பிராட் மைன்ட்”டுககு வந்துவிட்டார்கள்.

உலகம் மாறிக்கிட்டு வருது நாமளும் மாறித்தான் ஆவணும் நாம என்ன தினம் தினம் குடிச்சி சீரழயறமா? (??) என்னிக்காவது ஒரு நல்லது கெட்டதுக்குத்தான் குடிக்கிறோம். பழக்கம் ஆயிட்டா தான் தப்பு களவும் கற்று மறக்கணும் தெரியுமா என்று தன் பக்கம் எனனை அழைக்கிறார் ஒருவர்.

நீ பீர் கூட குடிச்சதில்லையா? பின்ன எதுக்கு உயிர் வாழற? என்று ஏளனம் செய்கிறார் இன்னொருத்தர்.

ஆக குடிக்கிறது மட்டும் தான் லட்சியம்ணு ஆயிடுச்சு.

இந்த போஸ்டை எழுதிய பின்பு இதை பதியலாமா வேணாமாணு படிச்சி பாத்து சொல்லுங்க என்றேன் ஆபீஸ் நண்பரிடம்

””கண்டிப்பா போடுங்க. அப்பத்தான் உங்களுக்கு கலாச்சாரக் காவலன் பட்டம் கிடைக்கும்” என்று விட்டு என்னைக் கிருமி மாதிரி பார்த்தார்.

நேற்று இரு(ற)ந்த நண்பன்!!!

நாம் பிறக்கிறதுக்கு பத்து மாதம் முன்னாடியே தெரிந்துவிடுகிறதே.அதே மாதிரி இறப்பதுக்கு முன்பே தெரியக்கூடாதா? தெரிவதில்லை. ஆனால் இது தான் வாழ்க்கையின் புதிர். வாழ்க்கையின் சஸ்பென்ஸ். நேற்றுவரை நகமும் சதையுமாக இருந்த நண்பன் இன்று இல்லை.

”நல்லாத்தானே ஆரோக்யமா தானே இருந்தார். என்னாச்சு” என்று கேட்கும்படியாக மாரடைப்பு கொஞ்ச நேரத்தில் எங்களை பிரித்துவிட்டது..

நீ சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லும் நண்பனிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகள் ஏராளம். நிதானம் பொறுமை அடுத்தவர் யாராக இருந்தாலும் வலிய உதவி செய்தல் எப்போதும் புன்னகை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

மரணம் உண்மையான விஷயம் தான். தினசரி பல பேருடைய மரணத்தையும் கேள்விபடுகின்றோம். இறுதி மரியாதைக்கு செல்கிறோம். என்றாலும் நமக்கு அருகாமையானவரின் மரணம் தான் நமக்கு உறைக்கிது. வலிக்கிறது.

சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் என்று சுஜாதா எழுதியது எவ்வளவு உண்மை. முன்தினம் வரை அதே வழக்கமான உற்சாகம் சந்தோஷம் நாளை என்ன நடக்கப் போவுது என்று தெரியாத கனவுகள். எல்லாமே ஒருசில வினாடிகளில் முடிஞ்சிடுதே!

நேற்று அவர். நாளை நான்!

மரணத்தைப் பற்றி யோசிக்கும்போதே தொடர்பான சிந்தனைகள் விரிகின்றன.

இன்று மருத்துவம் விஞ்ஞானம் இன்று முன்னேறிவிட்டாலும்

வாழ்வு சுருங்கிவிட்டது.

நான் சினனவனாக இருந்தபோது எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு திண்ணை இருக்கும் திண்ணைக்கு ஒரு கிழவி இருக்கும் கையை கண்ணுக்கு மேல் வைத்து ஷேடோ உண்டாக்கி போட்டோ எடுப்பது போல் பார்த்து ”…. மவனா நீ.. இங்க வா. மோந்துக்கறேன் (முத்தமிடுகிறேன்) என்று சொல்லும் கிழவிகளையும் திண்ணைகளையும் இன்றைக்கு காணோம்

சின்னவயதில் நல்லாத்தான் பேசிட்டு வயிறு நிறைய சாப்பிட்டு வயலுக்கு போனாரு முனி அடிச்சிடுச்சி வாயில ரத்தம் வந்து செத்து கெடக்காரு என்று கேள்விப்பட்டது இப்பத்தான் தெரிகிறது அந்த முனி மாரடைப்பு என்று.

அபுஹாத்திரின் உருக்கமான வீடியோ ஒன்று பார்த்தேன் அதில் வரும் வரிகள் நெஞ்சை உருக்கிவிடும்.

”நீங்கள் அழுகின்றிர்கள். எனக்கு கேட்கிறது. நான் அழுவது உங்களுக்கு கேட்கிறதா?” சில்லென்ற காற்று உடலை ஊடுருவுகிறது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

என்னை கிடத்திவிட்டு எல்லாரும் செல்கிறார்கள். கடைசி காலடி ஓசையும் முடிந்துவிட்டது. இனி நான் கடவுளை சந்திக்க வேண்டும் இதுவரை சம்பாதித்த பாவச்சுமைகளுடன்

எனக்கு துணை இனி யாரும் இல்லை. நான் மட்டும் தனியாக.

அந்த வீடியோவைப் பார்க்கும்போது உடம்பு சிலித்திரும். எவ்வளவு சரியான விஷயம். தனிமை இருள் சக்தியற்று மண்ணுக்குள் கிடக்க வேண்டும்.

உண்மையில் மரணம் வலிப்பதில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் தான் வலி உள்ளது. இத்தனை பாவங்களை இதுவரை சேர்தது வைத்தோமே இனி மரணத்திற்குப் பின் நாம் என்னாவோம் என்று உணர்வதில் தான் வலி இருக்கிறது. இனியொரு சான்ஸ் கிடைக்காதா நல்லவனாக வாழ்ந்து வரலாமே என்று நாம் நினைக்கப்போவது மரண தரவாயில் தான். ஆனால் அந்த சான்ஸ் கிடைப்பதேயில்லை.

அருகாமை மரணம் தான் நம்மை சிந்திக்க வைக்கிறது. திருத்துகிறது. எனினும் இந்த உலகத்தின் ஆசாபாசங்களின் கண்சிமிட்டலில் மரணத்தை மீண்டும் மறக்கின்றோம்.

Sநண்பன் ஒருவனிடம் சொர்க்கம் நரகம் பற்றி பேசும்போதெல்லாம் ”செத்த நாய் மேல எத்தனை லாரி ஏறுனா என்ன?” என்பான்

ஒரு நாள் விதிர்விதிர்த்து ஓடி வந்தான்

என்னடா என்றேன்

”உயிரோடு இருக்கும்போதே லாரி ஏறப்பாத்துச்சு மாப்ளே” என்றான்

நீதி மறுக்கப்படும்போது!!!

போதிய அதிகாரமற்ற – பணபலமற்ற – உடல்பலம் அற்ற சாமான்ய மனிதனின் உரிமை பறிக்கப்படும்போதும் அதிகாரவர்க்கத்தின் சுரணட்லுக்கும் ஏமாற்றுதலுக்கும் ஆட்படும்போதும் – மற்ற பலமிக்க மனிதர்களால் பாதிக்கப்படும்போதும் அவனது கடைசி நம்பிக்கை நீதித்துறைதான்.. ஜனநாயகத்தின் துணகளில் ஒன்றான் நீதித்துறைiயையும் தன் பக்கம் உள்ள நியாயத்தையுமே தனது பலமாக எண்ணிய சாமானியர்கள் தங்களுக்கு தங்கள் பக்கம் நீதி ஜெயிக்கும் என்று வீணாகும் நேரத்தையோ – பணத்தையோ அலைக்கழிப்பையோ பொருட்படுத்துவதில்லை. வரப்போகும் தீர்ப்பு தன் வேதனைகளுக்கு மருந்தாகும் என்பது அவர்கள் எண்ணம்.

வாதியும் பிரதிவாதியும் எந்த மதம் எந்த இனம் எந்த சாதி எந்த மாநிலம் எந்த மொழி என்ற விவரங்கள் நீதி தேவதைக்கு தேவையில்லை. அதற்காகவே அவள் கண்கள் கட்டப்பட்டு நியாயத்தராசை கையில் உயர்த்தியிருக்கிறாள்.

எனினும் தீர்ப்பு சொல்வது நீதி தேவதை அல்லவே.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்பதைக் கூட பொருட்படுத்தாது விடியல் பிறக்கும் என்று காத்துக் கிட்ந்தவர்கள் தீர்ப்பு சட்டப்படி நியாயப்படி அல்லாது பலத்தின் அடிப்படையில் அமையும்போது நொந்து போகிறார்கள். தனது நம்பிக்கை வீணாகிவிட்டதே என்று மன இறுக்கம் அடைகிறார்கள். இறுக்கம் குமுற வைக்கிறது. குமுறல் ஆவேசம் கொள்கிறது. சாமானிய மனிதனின் நிலையும் இது தான் ஒரு சமூகத்தின் நிலையும் இது தான்.

நம்பிக்கை கொண்டோர் மனம் துவளமாட்டார்கள். கடவுளின் சந்நிதானத்தில் இதுவல்ல இறுதி தீர்ப்பு.

எளியாரை வலியார் அடித்தால் வலியோரை தெய்வம் அடிக்கும். தெய்வத்தின் சந்நிதானத்தில் நியாயமே ஜெயிக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்.

தனக்கெதிராக உலகம் நடைபோடும்போதும் நீதி மறுக்கப்படும்போதும் பொறுமை எனும் கவசம் ஏற்பது மிகவும் நல்லது.

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.

நீதி ஜெயிக்கும்

அதுவரை

பொறுமை கொள்வோம்.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

Follow

Get every new post delivered to your Inbox.